போலீசாருக்கு மன அழுத்தத்தை குறைப்பது எப்படி?

போலீசாருக்கு மன அழுத்தத்தை குறைப்பது எப்படி என்பது குறித்து மனவள ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-08-05 20:15 GMT
கோவை


போலீசாருக்கு மன அழுத்தத்தை குறைப்பது எப்படி என்பது குறித்து மனவள ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


ஹேப்பினஸ் போலீசார்


கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை செய்ததை தொடர்ந்து, போலீஸ் அதிகாரிகள், போலீசாருக்கு மன அழுத்தத் தை குறைப்பது, தற்கொலை எண்ணம் ஏற்படாமல் மனவள ஆலோசனை வழங்குவது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்று டி.ஜி.பி. சங்கர்ஜிவால் உத்தரவிட்டார்.


இதைத்தொடர்ந்து அனைத்து போலீஸ் நிலையங்களிலும் ஒரு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை 'ஹேப்பினஸ்' அதிகாரிகளாக கோவை போலீஸ் கமிஷனர் நியமித்து உள்ளார். அந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு மனவள பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.


மனவள ஆலோசனை


கோவை நகரம் முழுவதும் தேர்வான 60 ஹேப்பினஸ் அதிகாரிக ளுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்கும் மனவள ஆலோசனை கூட்டம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது.


இதில், போலீஸ் துணை கமிஷனர் சுகாசினி தலைமை தாங்கி பேசும்போது, இங்கு பயிற்சி பெறும் போலீசார், தங்களது போலீஸ் நிலையத்தில் அனைத்து போலீசாரையும் மகிழ்ச்சியாக வைக்கவும், மன அழுத்தத்தை குறைத்து தன்னம்பிக்கையுடன் செயல்படவும் ஆலோசனை வழங்க வேண்டும். தற்கொலை எண்ணம் மற்றும் மன அழுத்தத்தில் மிகவும் பாதிக்கப்பட்டவர் களின் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்றார்.


வார விடுமுறை


தன்னம்பிக்கை பேச்சாளரும், மனவளக்கலை ஆலோசகருமான பிரியா செந்தில் பேசும்போது, பணியாற்றும் இடத்தில் உற்சாகத் துடன் பணியாற்ற வேண்டும். மன அழுத்தம், உடல்நலனுக்கு கேடானது. மனஅழுத்தம் ஏற்பட்டால் கவுன்சிலிங் மூலம் தன்னம்பிக்கை ஏற்படுத்தலாம் என்றார்.


ஆலோசனை கூட்டம் குறித்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ் ணன் கூறுகையில் போலீசார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், சப்- இன்ஸ்பெக்டர்களுக்கு வாரவிடுமுறை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பணிச்சுமை காரணமாக மன அழுத்தம் ஏற்படுவதை குறைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

மேலும் செய்திகள்