வனத்தை விட்டு யானைகள் வெளியே வராமல் தடுப்பது எப்படி?;வன ஊழியர்களுக்கு பயிற்சி

வனத்தை விட்டு யானைகள் வெளியே வராமல் தடுப்பது எப்படி? என்பது குறித்து வன ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2022-09-29 19:02 GMT

நாகர்கோவில், 

வனத்தை விட்டு யானைகள் வெளியே வராமல் தடுப்பது எப்படி? என்பது குறித்து வன ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சி

குமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் ஹெக்டர் பரப்பில் வனப்பகுதி உள்ளது. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டுபன்றி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வசித்து வருகின்றன. கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பின்படி குமரி மாவட்ட வனத்தில் 14 முதல் 20 யானைகள் வரை வசித்து வருகின்றன. தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்கிய பிறகு கேரளாவில் இருந்து யானைகள் அதிகளவில் வரும் என்றும், இதனால் யானைகள் எண்ணிக்கை 50 வரை உயரும் என்று வனத்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இந்தநிலையில் யானைகள் பாதுகாப்பு குறித்த பயிற்சி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வன அதிகாரி இளையராஜா தலைமை தாங்கினார். டாக்டர் சிவ கணேசன் கலந்துகொண்டு பயிற்சி வழங்கினார். அப்போது, காட்டில் யானைகளுக்கு எந்த விதமான உணவுகள் தேவை என்பது பற்றியும், யானைகள் வனத்தை விட்டு வெளியே வராமல் தடுக்க செய்ய வேண்டிய நடவடிக்கை என்ன? என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்