இல்லத்தரசிகள் அதிர்ச்சி

தஞ்சையில் பீன்ஸ் விலை நேற்று கிலோ ரூ.100-க்கு விற்பனையானது. அவரைக்காய் விலையும் சதத்தை நெருங்கி வருகிறது. கடும் வெயில் காரணமாக விளைச்சல் குறைந்ததால் இந்த விலையேற்றம் காணப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

Update: 2023-10-06 19:58 GMT

தஞ்சையில் பீன்ஸ் விலை நேற்று கிலோ ரூ.100-க்கு விற்பனையானது. அவரைக்காய் விலையும் சதத்தை நெருங்கி வருகிறது. கடும் வெயில் காரணமாக விளைச்சல் குறைந்ததால் இந்த விலையேற்றம் காணப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

காமராஜர் மார்க்கெட்

தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா, தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு வரும். மேலும் தஞ்சையில் இருந்தும் தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்து காணப்பட்டது. குறிப்பாக தக்காளி கிலோ ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டது. இதர காய்கறிகளின் விலையும் கடுமையாக உயர்ந்து காணப்பட்டது. அதன் பின்னர் காய்கறிகளின் விலை சற்று குறையத்தொடங்கியது. தக்காளியின் விலையும் வெகுவாக குறைந்து கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போதும் சில காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது.

பீன்ஸ், அவரைக்காய் விலை உயர்வு

குறிப்பாக பீன்ஸ் தஞ்சையில் நேற்று கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. பீன்ஸ், தஞ்சை மார்க்கெட்டுக்கு பெங்களூரு, ஓசூர் போன்ற பகுதிகளில் இருந்து விற்பனைக்கு கொண்டுவரப்படும். இதே போல் அவரைக்காய் கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டது. அவரைக்காய் திண்டுக்கல், சின்னமனூர், ஒட்டன்சத்திரம் போன்ற பகுதிகளில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

தற்போது அந்த பகுதிகளில் கோடைகாலம் போல வெயில் சுட்டெரித்து வருவதால் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக அவரைக்காய் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதே போல் பீன்ஸ் விளைச்சலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் வரத்து குறைவாக உள்ளது. இதனால் தான் இந்த விலை உயர்வு காணப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர், .

காய்கறிகள் விலை விவரம்

தஞ்சை மார்க்கெட்டில் நேற்று விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளின் விலை (கிலோ கணக்கில்) வருமாறு:-

கத்தரிக்காய் ரூ.40 முதல் ரூ.60 வரை, முள்ளங்கி ரூ.45, கேரட் ரூ.40, சவ்சவ் ரூ.30, வெள்ளரிக்காய் ரூ.35, பச்சை மிளகாய் ரூ.40, குடைமிளகாய் ரூ.80, பாகற்காய் ரூ.50, பீன்ஸ் ரூ.100, பீட்ரூட் ரூ.50, காலிபிளவர் ரூ.40, அவரைக்காய் ரூ.90, எலுமிச்சம்பழம் ரூ.120, புடலங்காய் ரூ.40, முட்டைகோஸ் ரூ.40, தக்காளி ரூ.10, உருளைக்கிழங்கு ரூ.30, சின்னவெங்காயம் ரூ.80, பல்லாரி ரூ.40.

Tags:    

மேலும் செய்திகள்