பயங்கர வெடி சத்தத்தால் வீடுகள் அதிர்ந்தன
வாணாபுரம் பகுதியில் பயங்கர வெடி சத்தத்தால் வீடுகள் அதிர்ந்தன.
வாணாபுரம்
வாணாபுரம் பகுதியில் பயங்கர வெடி சத்தத்தால் வீடுகள் அதிர்ந்தன.
திருவண்ணாமலை மாவட்ட எல்லை பகுதியில் வாழவச்சனூர், சதாகுப்பம், அகரம்பள்ளிப்பட்டு, தலையாம்பள்ளம், தச்சம்பட்டு, நரியாபட்டு, எடக்கல், விருது விளங்கினான், நவம்பட்டு, அள்ளிக்கொண்டா பட்டு உள்ளிட்ட ஊர்கள் உள்ளன.
நேற்று இரவு திடீரென இந்த பகுதியில் பயங்கர வெடிச்சத்தம் உணரப்பட்டது. மேலும் வீடுகள் அதிர்ந்ததாகவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லை பகுதியில் உள்ள மேலந்தல், காங்கேயனூர் மற்றும் அதனை சுற்றுவட்டார பகுதியில் நேற்று மதியம் 1 மணியளவில் விமானம் வெடித்து மையனுார் வனப்பகுதியில் விழுந்ததாக தகவல் பரவியது. இதனையடுத்து கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட எல்லை பகுதியில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சத்தத்தால் அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் வனப்பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து உடைந்ததாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த புகைப்படம் கடந்த 2021-ம் ஆண்டு குன்னூர் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானபோது எடுத்த படம் என்பது பின்னர் தெரியவந்தது.
இந்த நிலையில் வெடிச்சத்தம் ஏற்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.