தொடர் மழையால் வீடுகள் சேதம்

தொடர் மழையால் நவம்பட்டி காலனியில் உள்ள ேசதமடைந்துள்ள வீடுகளை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-11-13 18:18 GMT

வீடுகள் சேதம்

இலுப்பூர் அருகே நவம்பட்டியில் குடியிருப்பு காலனி உள்ளது. இங்கு இருக்கக்கூடிய பெரும்பாலான வீடுகளில் சிமெண்டு பூச்சுகள் உடைந்து வீடுகள் சேதமடைந்த நிலையில் உள்ளது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நவம்பட்டி குடியிருப்பு காலனியில் உள்ள பழுதடைந்துள்ள வீடுகளை மராமத்து பணி செய்து தர வேண்டும். பல ஆண்டுகளாக மழை நேரங்களில் வீடுகளில் சிமெண்டு பூச்சுகள் இடிந்து கொட்டுவதும், மழை நீர் வடிவதுமாவே உள்ளது.

இதனால் குழந்தைகளை வைத்துக்கொண்டு வீடுகளில் வசிப்பதற்கு சிரமப்படுகின்றனர். மேலும் வீடுகள் இடிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அப்பகுதி பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

கோரிக்கை

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், நவம்பட்டி காலனியில் உள்ள பல வீடுகளில் சிமெண்டு பூச்சுக்கள் பெயர்ந்து விழுந்துள்ளது. இதனால் மழை நேரங்களில் வீடுகள் முழுவதும் மழை நீர் ஒழுகுகிறது. இதனால் வீட்டில் குடியிருக்க முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தும் எந்த பயனும் நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்