வீடு புகுந்து 2½ பவுன் நகை திருட்டு

வீடு புகுந்து 2½ பவுன் நகை திருட்டு

Update: 2023-05-05 18:45 GMT

சிங்காநல்லூர்

கோவை சிங்காநல்லூர் கே.பி.ஆர். லே அவுட்டை சேர்ந்தவர் சாந்தி(வயது 55). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். பின்னர் மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவில் வைத்திருந்த 2½ பவுன் தங்க நகையை காணவில்லை. மர்ம நபர் உள்ளே புகுந்து நகையை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் சாந்தி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்