ஆரல்வாய்மொழியில் வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம்; 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது
ஆரல்வாய்மொழியில் வீடு வாடகைக்கு எடுத்து விபசாரத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆரல்வாய்மொழி,
ஆரல்வாய்மொழியில் வீடு வாடகைக்கு எடுத்து விபசாரத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
விபசாரம்
ஆரல்வாய்மொழியில் வீடு வாடகைக்கு எடுத்து இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஆரல்வாய்மொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா, சப் -இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் போலீசார் வடக்கு பெருமாள்புரம் பகுதியில் உள்ள குறிப்பிட்ட வீட்டை சுற்றி வளைத்து சோதனையிட்டனர்.
அப்போது அங்குள்ள ஒரு அறையில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், 50 வயதுடைய மற்றொரு பெண் அரைகுறை ஆடையுடன் இருந்தனர். மற்றொரு தனி அறையில் 50 வயதுடைய 2 பெண்கள், ஒரு வாலிபர் அரைகுறை ஆடையுடன் இருந்தனர்.
3 பேர் கைது
பின்னர் போலீசார் அனைவரையும் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அதில், ஏர்வாடி காந்திநகரை சேர்ந்த பொன் செல்வி (வயது 45), வெட்டூர்ணிமடம் அருகே பரமார்த்தலிங்கம் பகுதியை சேர்ந்த தங்கம் (50) ஆகியோர் வீட்டை வாடகைக்கு எடுத்து வெளியூரில் உள்ள பெண்களை வரவழைத்து விபசார தொழிலில் ஈடுபடுத்தியதும், அரைகுறை ஆடையுடன் இருந்த வாலிபர் ராதாபுரம் அருகே உள்ள மகேந்திரபுரம் தெற்குதெருவை சேர்ந்த மலையரசன் ( 21) என்பதும் தெரிய வந்தது. பின்னர் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 3 பெண்களும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.