மழையில் வீடு இடிந்து சேதம்
வீரவநல்லூர் அருகே மழையில் வீடு இடிந்து சேதம் அடைந்தது.
சேரன்மாதேவி:
வீரவநல்லூர் அருகே உள்ள தெற்கு வீரவநல்லூர் கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட புதூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவரது வீடு நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக இடிந்து விழுந்துவிட்டது. இதில் வீட்டிலிருந்த சமையல் பாத்திரங்கள், கட்டில் உள்ளிட்ட பொருட்கள் சேதம் அடைந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.