வீட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

விளாத்திகுளம் அருகே வீட்டை உடைத்து நகை-பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

Update: 2023-06-10 18:45 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் உதயா நகர் பகுதியை சேர்ந்த ராஜாராம் என்பவருடைய மனைவி இளங்கோ லட்சுமி (வயது 50). இவர் தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் இளங்கோ லட்சுமி விளாத்திகுளம் அருகே என்.ஜெகவீரபுரம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த கம்மல், மோதிரம், மூக்குத்தி உள்ளிட்ட ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகை மற்றும் ரூ.80 ஆயிரம் ரொக்கப்பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்