வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

ஒன்றிய கவுன்சிலரின் வீடு புகுந்து நகை, பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-12-26 20:23 GMT

கொல்லங்கோடு,

ஒன்றிய கவுன்சிலரின் வீடு புகுந்து நகை, பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கவுன்சிலர் வீட்டில் ெகாள்ளை

கொல்லங்கோடு அருகே அடைக்காகுழி மங்குளி பகுதியை சேர்ந்தவர் ரெஜி. முன்சிறை ஒன்றிய கவுன்சிலராக உள்ளார்.

சம்பவத்தன்று இரவு இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக்காக சென்றார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பின்னர் பீரோவை உடைத்து அதிலிருந்த 4 கிராம் எடை உடைய 3 மோதிரங்கள் மற்றும் ரூ.7,500-ஐ திருடி விட்டு தப்பி விட்டனர். இதற்கிடையே பிரார்த்தனையை முடித்த ரெஜி குடும்பத்தினர் வீடு திரும்பிய போது திருட்டு நடந்ததை கண்டு திடுக்கிட்டனர். மேலும் இதுகுறித்து ரெஜி கொல்லங்கோடு போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் விசாரணை

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியிருந்த கைரேகை பதிவு செய்யப்பட்டது. மர்மநபர்கள் பற்றி துப்பு துலக்க அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்