வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

சிவகாசி அருகே வீடு புகுந்து நகை மற்றும் பணத்தை திருடி சென்றனர்.

Update: 2022-08-19 19:08 GMT

சிவகாசி, 

சிவகாசி அருகே உள்ள ஏ.லட்சுமியாபுரத்தை சேர்ந்த மாரியப்பன் மனைவி முத்து (வயது 35). இவர் சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது கதவு திறக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த 10 கிராம் தங்க நகைகள், வெள்ளி கொலுசு, ரொக்கம் ரூ.5 ஆயிரம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து முத்து, மாரனேரி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்