வீடு புகுந்து நகை திருட்டு

வீடு புகுந்து நகையை திருடி சென்றனர்.

Update: 2023-06-08 19:24 GMT


விருதுநகர் அருகே உள்ள பெரிய பள்ளி குளம் கிராமத்தில் வசிப்பவர் மகாலட்சுமி (வயது41). கணவருடன் விவாகரத்து பெற்றுவிட்ட நிலையில் தனியாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்தநிலையில் 2 வாலிபர்கள் வீட்டு மாடிக்கு வந்த போது அவர்களை சத்தம் போட்டு விரட்டி விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தனது பெற்றோர் வீட்டில் சென்று தங்கினார். காலையில் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. வீட்டினுள் இருந்த 1½ பவுன் நகை மற்றும் டி.வி. திருட்டு போய் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்