வீடு புகுந்து நகை திருட்டு

வீடு புகுந்து நகையை திருடி சென்றனர்.

Update: 2023-07-13 22:14 GMT


விருதுநகர் அருகே உள்ள ஓ. சங்கரலிங்கபுரத்தில் வசிப்பவர் செந்தில்குமார். இவரது மனைவி நித்யா. செந்தில்குமார் சிவகாசியில் வேலை பார்த்து வருகிறார். நித்யா வீட்டில் குழந்தைகள் தூங்கி கொண்டிருக்கும் போது வீட்டை பூட்டாமல் வெளியே சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் பீரோவில் இருந்த 9 பவுன் நகை திருட்டு போய்விட்டது. இதுகுறித்து நித்யா கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்