வீடு புகுந்து 20 பவுன் நகை திருட்டு

விருதுநகரில் வீடு புகுந்து 20 பவுன் நகையை திருடி சென்றனர்.

Update: 2023-07-06 20:09 GMT

விருதுநகர்

விருதுநகரில் வீடு புகுந்து 20 பவுன் நகையை திருடி சென்றனர்.

நகை திருட்டு

விருதுநகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் பாபு (வயது 34). இவரது மனைவி நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வருகிறார். அவர் இரவு பணிக்கு சென்றுவிட்ட நிலையில் விக்னேஷ்பாபு வீட்டின் தலைவாசல் கதவை பூட்டிவிட்டு தூங்கிவிட்டார்.

இவரது பெற்றோர் மாடியில் படுத்திருந்தனர்.

பின்னர் மறுநாள் காலை 6 மணிக்கு எழுந்து பார்த்தபோது வீட்டின் கதவும், மாடி கதவும் திறந்திருந்தது. அப்போது வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 20 பவுன் நகைகள் திருட்டு போனது தெரியவந்தது.

ேபாலீசார் விசாரணை

இதுகுறித்து விக்னேஷ்பாபு கொடுத்த புகாரின் பேரில் இந்நகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வீடு புகுந்து நகை திருடிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்