மோகனூர் அருகே தொடர் மழைக்கு வீடு இடிந்து சேதம்

Update: 2022-12-14 18:45 GMT

மோகனூர்:

மோகனூர் அருகே உள்ள பேட்டப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கீழ பேட்டபாளையத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 55). இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான ஓட்டு வீடு கீழ பேட்டப்பாளையத்தில் உள்ளது. அந்த வீட்டில் ராஜமாணிக்கத்தின் அண்ணி பொன்னம்மாள் வசித்து வந்தார்.

இந்த நிலையில் தொடர் மழை காரணமாக வீடு சேதம் அடைந்தது. இதை தொடர்ந்து பொன்னம்மாள் அருகில் வசிக்கும் தனது மகன் கோபால் வீட்டுக்கு பொருட்களை எடுத்து சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஓட்டு வீடு திடீரென இடிந்து விழுந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பேட்டப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர், மோகனூர் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று சேதத்தை பார்வையிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்