வெளிமாநில ஓட்டல் தொழிலாளி தற்கொலை

திருவோணம் அருகே வெளிமாநில ஓட்டல் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-10-18 19:46 GMT

ஒரத்தநாடு;

மேற்கு வங்காள மாநிலம் சல்பாபுரி மாவட்டம் துல்சிபாடா கிராமத்தைச் சேர்ந்தவர் செண்டர்வா மகன் ஆஷிக்(வயது30). இவர் திருவோணத்தை அடுத்துள்ள ஊரணிபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் கடந்த 2018-ம் ஆண்டுக்கு முன்பு வேலை செய்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆஷிக் மீண்டும் ஊரணிபுரத்தில் உள்ள அதே ஓட்டலுக்கு திரும்ப வந்து வேலை கேட்டார். இந்த நிலையில் ஊரணிபுரத்தில் உள்ள ஒரு தனியார் கட்டிட தங்கும் அறையில் தங்கியிருந்த ஆஷிக் நேற்று அந்த அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவோணம் போலீசார் ஆஷிக்கின் உடலை கைப்பற்றி அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்