சென்னையில் மின்சாரம் தாக்கி ஓட்டல் ஊழியர் சாவு
சென்னையில் மின்சாரம் தாக்கி ஓட்டல் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.;
சென்னை பட்டினப்பாக்கம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் வேலை செய்து வந்தவர் பிஸ்வா சாதன் (வயது 32). திரிபுரா மாநிலத்தை சேர்ந்த இவர், கடந்த ஒரு ஆண்டாக அந்த ஓட்டலில் தங்கி பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பிஸ்வா ஓட்டலில் உள்ள சமையல் அறையில் பாத்திரங்களை கழுவிக்கொண்டிருந்தார். அப்போது ஈரமான கையுடன் மின்சார சுவிட்சை ஆன் செய்தார். அப்போது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட பிஸ்வா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து பட்டினப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். பிஸ்வா சாதனுக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.