மோட்டார்சைக்கிள் கவிழ்ந்து ஓட்டல் உரிமையாளர் பலி

மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து ஓட்டல் உரிமையாளர் பலியானார்.;

Update: 2022-09-13 19:00 GMT

மத்தூர்:-

ஊத்தங்கரை தாலுகா மிட்டப்பள்ளி அருகே சாமகவுண்டவலசை கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 38). ஓட்டல் உரிமையாளர். இவர் மோட்டார் சைக்கிளில் கொடமாண்டப்பட்டி- போச்சம்பள்ளி சாலையில் புளியாண்டப்பட்டி பகுதியில் ஒரு ரைஸ் மில் அருகில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அந்த நேரம் எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் கவிழ்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்து ரமேசை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரமேஷ் நேற்று முன்தினம் இறந்தார். இந்த விபத்து குறித்து மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்