விபத்தில் காயமடைந்த ஓட்டல் உரிமையாளர் சாவு

விபத்தில் காயமடைந்த ஓட்டல் உரிமையாளர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-06-18 21:15 GMT

அருமனை, 

விபத்தில் காயமடைந்த ஓட்டல் உரிமையாளர் பரிதாபமாக இறந்தார்.

சாவு

தேங்காப்பட்டணம் பீச்ரோட்டைச் சேர்ந்தவர் முஜிபுர் ரகுமான் (வயது 47). இவர் மார்த்தாண்டத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் களியலில் இருந்து நெட்டா பகுதிக்கு தொழில் விஷயமாக மோட்டார் சைக்கிளில் பொருட்கள் வாங்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அவருக்கு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கடையல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த முஜிபூர் ரகுமானுக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்