ஓட்டல் ஊழியர்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள உஞ்சினி கிராமத்தை சேர்ந்த முருகேசனின் மகன் ராஜதுரை(வயது 22). இவர் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்துவிட்டு, உடையார்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று விடுப்பு எடுப்பதாக ஓட்டலுக்கு தகவல் தெரிவித்ததாக தெரிகிறது. இதையடுத்து அவர் உடையார்பாளையம் கடைவீதியில் உள்ள வாடகை வீட்டில் உள்ள ஒரு அறையில் அவர் தங்கி இருந்துள்ளார்.
பிணமாக கிடந்தார்
நீண்ட நேரமாகியும் அவர் ஓட்டலுக்கு சாப்பிட செல்லவில்லை. இதனால் ஓட்டல் ஊழியர்கள் நேற்று மாலை அவர் தங்கியிருந்த அறைக்கு வந்து, கதவை திறந்து பார்த்தனர். அப்போது ராஜதுரை பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது பற்றி அவரது பெற்றோர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ேமலும் இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் முருகேசன் அளித்த புகார் அளித்தார். இதையடுத்து ராஜதுரையின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.
போலீசார் விசாரணை
ராஜதுரை எப்படி இறந்தார்?, அவரது சாவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.