ஓட்டல் ஊழியர் சாவு; 5 பேர் படுகாயம்

ஓட்டல் ஊழியர் சாவு; 5 பேர் படுகாயம்

Update: 2022-06-09 14:33 GMT

வேளாங்கண்ணி:

திருப்பூண்டியில் ஸ்கூட்டர் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் ஓட்டல் ஊழியர் பரிதாபமாக இறந்தார். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஓட்டல் ஊழியர்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா ஆண்டாங்கரை கீழத்தெரு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் சுரேந்தர் (வயது23). இவர் திருவாரூரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை பார்த்துவந்தார். நேற்றுமுன்தினம் மாலை இவர் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த ஜீவா (30), அய்யப்பன் (32) ஆகியோருடன் மோட்டார்சைக்கிளில் வேளாங்கண்ணிக்கு வந்துவிட்டு பின்னர் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை சுரேந்தர் ஓட்டினார். மோட்டார்சைக்கிள் திருப்பூண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வந்த போது, வேளாங்கண்ணி பூக்காரத்தெரு பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (47) என்பவர் ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது மோட்டார்சைக்கிள் மோதியது.

5 பேர் படுகாயம்

இதில் படுகாயமடைந்த சுரேந்தர், ஜீவா, அய்யப்பன், ஜெயக்குமார், அவரது குழந்்தைகள் யுஜா (15), யுகேஷ் (13) ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சுரேந்தரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனனே இறந்துவிட்டதாக கூறினர். படுகாயமடைந்த ஜீவா, அய்யப்பன் ஆகியோர் நாகை அரசு ஆஸ்பத்திரியிலும், ஜெயகுமார், யுஜா, யுகேஷ் ஆகிய மூவரும் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்