மதுரை அருகே பெண் கொலையில் ஓட்டல் ஊழியர் கைது
மதுரை ஒத்தக்கடை அருகே பெண் கொலையில் ஓட்டல் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
புதூர்,
மதுரை ஒத்தக்கடை அருகே பெண் கொலையில் ஓட்டல் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
கொலை
மதுரை ஒத்தக்கடை ராஜகம்பீரம் பகுதியை சேர்ந்தவர் மாயாண்டி. இவர் மனைவி கோட்டையம்மாள்(வயது 70). ஒத்தக்கடை பைபாஸ் அருகே உள்ள மதுக்கடை பின்புறம் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். இந்தநிலையில் அவர் இறந்து கிடந்தார். தலையில் கல்லை தூக்கிப்போட்டு அவர் கொலை செய்துப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ஒத்தக்கடை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர் செந்தாமரைக்கண்ணன், நுண்ணறிவு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் உள்பட போலீசார் சம்பவத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர்.. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்த சம்பவத்தில் மதுக்கடை அருகே ஓட்டலில் ஊழியராக வேலைபார்த்து வந்த தேனி மாவட்டம் பங்களாமேடு பகுதிைய சேர்ந்த சங்கிலிக்கருப்பு என்ற பிரபு(25) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
கைது
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது, மதுபோதையில் அந்த பகுதி வழியாக பிரபு சென்ற போது கோட்டையம்மாள் ஆடு மேய்த்து கொண்டு இருந்ததை பார்த்துள்ளார். இதையடுத்து பலாத்காரம் செய்யும் நோக்கத்தில் அவன் மூதாட்டியை தூக்கிக்கொண்டு மறைவான பகுதிக்கு சென்றுள்ளான். அப்போது கோட்டையம்மாள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சத்தம் போட்டுள்ளார். மேலும் நீ ஓட்டலில் வேலைபார்க்கும் பையன் தானே என கேட்டுள்ளார். இதனால் கோட்டையம்மாளுக்கு தன்னை அடையாளம் தெரிந்து விட்டது என கருதிய பிரபு அதிர்ச்சி அடைந்துள்ளார்..
பின்னர் இதை வெளியே சொல்லி போலீசில் அவர் தன்னை சிக்க வைத்து விடுவார் என கருதி கொலை செய்தது தெரியவந்தது. மேலும் அவர் கோட்டையம்மாளை தூக்கி செல்வது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருப்பது தெரியவந்தது.இதையடுத்து பிரபுவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்