பாலக்கோட்டில் சீனிவாசா பேக்கரி, சிவசக்தி ஓட்டல் அன்புமணி ராமதாஸ் எம்.பி. திறந்து வைத்தார்

Update: 2022-12-04 18:45 GMT

பாலக்கோடு தக்காளி மார்க்கெட் எதிரில் தமிழ்நாடு உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர் பி.முருகேசன் புதிதாக சிவா சீனிவாசா பேக்கரி மற்றும் சிவசக்தி ஓட்டல் என்னும் சைவ, அசைவ உணவகத்தை தொடங்கியுள்ளார். இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு பா.ம.க. மாவட்ட செயலாளர் எஸ்,.பி.வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஓட்டல் உரிமையாளர் முருகேசன் வரவேற்றார். முன்னாள் எம்.பி. டாக்டர் செந்தில், மாநில துணைத்தலைவர்கள் பாடி செல்வம், சாந்தமூர்த்தி, தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில செயலாளர் வேலுசாமி, கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் சண்முகம், கொள்கை விளக்க அணி மாநில தலைவர் பாரிமோகன், இளைஞர் சங்க மாநில செயலாளர் முருகசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு பேக்கரி மற்றும் ஓட்டலை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே. மணி எம்.எல்.ஏ. முதல் விற்பனையை தொடங்கி வைத்து பேசினார்.

விழாவில் மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் சிவகுமார், மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர்கள் சின்னசாமி, முனிவேல், சதீஷ், மாதப்பன், சிவகுரு, சிலம்பு, மாவட்ட துணை தலைவர்கள் எஸ்.சந்தோஷ், தேவராஜ், பி.சந்தோஷ், கட்சியின் மாவட்ட தலைவர் செல்வகுமார், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட தலைவர் பாலாஜி, மாவட்ட அமைப்பு தலைவர் கிருஷ்ணன், நகர தலைவர் ராஜா, முன்னாள் ஊராட்சி தலைவர் சேகர் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் பாலக்கோடு நகர செயலாளர் ராஜசேகர் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்