திண்டுக்கல் பண்ணை பார்மசி கல்லூரியில் விடுதி தினவிழா

திண்டுக்கல் பண்ணை பார்மசி கல்லூரியில் விடுதி தினவிழா நடைபெற்றது.

Update: 2023-03-10 20:30 GMT

திண்டுக்கல்லை அடுத்த தாமரைப்பாடியில் உள்ள பண்ணை பார்மசி கல்லூரியில் விடுதி தின விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு கல்லூரி தலைவர் பண்ணை டாக்டர் கார்த்திகேயன், துணைத்தலைவர் பரத் ஸ்ரீநிவாஸ், நிர்வாக இயக்குனர் பரத் நிரஞ்சன், முதன்மை செயல் அதிகாரி கோகுலகிருஷ்ணன், நிர்வாக அலுவலர் மஞ்சுளாதேவி, கல்லூரி முதல்வர் கணேசன் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் கல்லூரி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் கல்லூரி சுகாதார பணியாளர்கள், சமையல் கலைஞர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு மாணவ-மாணவிகள் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விடுதி காப்பாளர் புவனேந்திரன் மற்றும் மாணவ-மாணவிகள் செய்திருந்தனர். முடிவில் உதவி பேராசிரியை சுவாதி முத்துச்செல்வம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்