ஆஸ்பத்திரி பெண் ஊழியர் தற்கொலை
சங்கரன்கோவில் அருகே ஆஸ்பத்திரி பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள அச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிராஜ் மனைவி ஜெயதேவி (வயது 22). இவர் தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் குடும்ப தகராறு காரணமாக ஜெயதேவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் சங்கரன்கோவில் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ஜெயதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் சங்கரன்கோவில் உதவி கலெக்டர் சுப்புலட்சுமி விசாரணை நடத்தி வருகிறார்.