கல்லூரி பஸ் மோதி மருத்துவமனை ஊழியர் பலி

கல்லூரி பஸ் மோதி மருத்துவமனை ஊழியர் உயிரிழந்தார்.

Update: 2023-09-21 20:24 GMT

சோமரசம்பேட்டை:

பஸ் மோதியது

திருச்சியை அடுத்த சோமரசம்பேட்டை அருகே உள்ள இரட்டை வாய்க்கால் வாசன் சிட்டி 19-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ஆலிவர். இவரது மகன் ஜஸ்டின் வரதராஜ்(வயது 24). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஸ்கேன் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் இவர் நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக தனது தந்தையுடன் வீட்டில் இருந்து மொபட்டில் புறப்பட்டார். ெமாபட்டை ஜஸ்டின் வரதராஜ் ஓட்ட ஆலிவர் பின்னால் அமர்ந்திருந்தார். வயலூர் சாலையில் வந்தபோது அந்த வழியாக வந்த தனியார் கல்லூரி பஸ், மொபட் மீது மோதியது. இதில் ஆலிவர், ஜஸ்டின் வரதராஜ் ஆகியோர் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

தலைநசுங்கி சாவு

அப்போது ஜஸ்டின் வரதராஜின் தலையில், அந்த பஸ்சின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தார். ஆலிவர் காயங்களுடன் உயிர் தப்பினார்.

இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சோமரசம்பேட்டை போலீசார், ஜஸ்டின் வரதராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, கல்லூரி பஸ்சை ஓட்டி வந்த டிரைவரான அதவத்தூரை சேர்ந்த சீனிவாசனை(53) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில், தந்தை கண் முன்னே மகன் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்