நடனம் ஆடி பார்வையாளர்களை கவர்ந்த குதிரைகள்

பனைக்குளத்தில் நடனம் ஆடி குதிரைகள் பார்வையாளர்களை கவர்ந்தன.

Update: 2023-01-17 18:46 GMT

பனைக்குளம், 

மண்டபம் ஊராட்சி ஒன்றியம் பனைக்குளம் கிராமத்தில் கால்நடை வளர்ப்போர் சங்கம் இயங்கி வருகிறது. இந்த சங்கத்தின் சார்பில் 3-ம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா பனைக்குளம் நூர்முகம்மது கம்பம் வளாகத்தில் நடைபெற்றது. பனைக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பவுசியா பானு மற்றும் ஜமாத் நிர்வாகிகள் முன்னிலை வகித்து போட்டிகளை தொடங்கி வைத்தனர். சித்தார்கோட்டை முகமதியா பள்ளி, பனைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, அழகன்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு ஆசிரியர்கள் நடுவர்களாக இருந்து போட்டிகளை நடத்தி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து அன்று மாலை 10-க்கும் மேற்பட்ட நாட்டிய குதிரைகள், இன்னிசை மேளங்கள் முழங்க பனைக்குளம் பகுதியில் ஊர்வலமாக சென்றது. ஊர்வலத்தில் குதிைரகள் நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு பனைக்குளம் பரிபாலன சபை தலைவர் ஜைனுல் அஸ்ஸலாம், செயலாளர் முகமது ரோஸ் சுல்தான், முஸ்லீம் நிர்வாக சபை தலைவர் அம்சத் அலி, செயலாளர் சாகுல் ஹமீது மற்றும் ஐக்கிய முஸ்லிம் சங்கம், வாலிப முஸ்லிம் சங்கம் நிர்வாகிகள், ஜமாத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக வாலாந்தரவை கால்நடை டாக்டர் நிஜாமுதீன், சித்த மருத்துவர் ராஜலட்சுமி, தேவிபட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் உள்பட பலர் விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள். இதற்கான ஏற்பாடுகளை கால்நடை வளர்ப்போர் சங்கத்தலைவர் செய்குல் அக்பர், உதவி தலைவர் முகமது களஞ்சியம், செயலாளர் முகமது ரோஸ் சுல்தான், உதவிச்செயலாளர் பாலமுருகன், பொருளாளர் முகமதுஹசன், ஒருங்கிணைப்பாளர் அபு முகமது, தணிக்கையாளர்கள் நூருல் ஹசன், முகமது சலீம், புதுவலசை ரியல் காதர்ஷா, யாசிர் மஹாதிர் உள்பட கால்நடை வளர்ப்போர் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்திருந்தனர். பரிசளிப்பு விழா நிகழ்ச்சிகளை தலைவர் செய்குல் அக்பர் தொகுத்து வழங்கினார். முடிவில் சிராஜ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்