பந்தயத்தில் இலக்கை நோக்கிப்பாய்ந்த குதிரை வண்டிகள்

கல்லல் அருகே ஆலய திருவிழாவையொட்டி மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.

Update: 2023-05-20 18:45 GMT

காரைக்குடி

கல்லல் அருகே ஆலய திருவிழாவையொட்டி மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.

மாட்டு வண்டி பந்தயம்

கல்லல் ஒன்றியத்திற்குட்பட்ட பனங்குடி கிராமத்தில் நடைபெற்ற இறை இயேசுவின் வின்னேற்ற விழாவையொட்டி மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் பனங்குடி-கண்டுப்பட்டி சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 49 வண்டிகள் கலந்துகொண்டு முதலில் மாட்டு வண்டி பந்தயத்தில் பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என இரு பிரிவாக நடைபெற்றது.

பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 8 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை பனங்குடி மணி மற்றும் வெட்டிவயல் சுந்தரேசன் வண்டியும், 2-வது பரிைச உலகுபிச்சான்பட்டி ரமேஷ்ராஜா மற்றும் சத்திரப்பட்டி ஜெயபாலகிருஷ்ணன் வண்டியும், 3-வது பரிசை சிங்கம்புணரி வைரவன் மற்றும் மதகுபட்டி அழகு வண்டியும் பெற்றது.

குதிரை வண்டி பந்தயம்

பின்னர் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 22 வண்டிகள் கலந்துகொண்டு இரு பிரிவாக நடைபெற்றது. முதல் பிரிவில் முதல் பரிசை இளங்கிப்பட்டி பாலு மற்றும் அய்யம்பாளையம் கிஷோர்குமார் வண்டியும், 2-வது பரிசை திருவாதவூர் சிவகார்த்திகேயன் வண்டியும், 3-வது பரிசை பொட்டிப்பரம்புதூர் அபிநயா வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற 2-வது பிரிவில் முதல் பரிசை நெற்புகப்பட்டி ரிதன்யா சதீஷ்குமார் வண்டியும், 2-வது பரிசை சிவபுரிப்பட்டி மூர்த்தி வண்டியும், 3-வது பரிசை சிங்கம்புணரி பழனிச்சாமி வண்டியும் பெற்றது.

குதிரை வண்டி பந்தயத்தில் 19 குதிரை வண்டிகள் கலந்துகொண்டன. இதில் முதல் பரிசை நாகூர் ஆண்டவர் வண்டியும், 2-வது பரிசை பொன்மலைப்பட்டி சாமி குரூப்ஸ் வண்டியும், 3-வது பரிசை ஆறாவயல் காளிதாஸ் வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்