குதிரை, மாட்டு வண்டி பந்தயம்

சிவகங்கை கீழ்பாத்தியம்மன் கோவில் ஆடி உற்சவ விழாவையொட்டி மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.

Update: 2023-07-29 19:15 GMT

சிவகங்கை

சிவகங்கை கீழ்பாத்தியம்மன் கோவில் ஆடி உற்சவ விழாவையொட்டி மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.

மாட்டு வண்டி பந்தயம்

சிவகங்கை அண்ணாமலை நகர் பகுதியில் உள்ள கீழ்பாத்தியம்மன் கோவில் ஆடி உற்சவத்தை முன்னிட்டு மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் அண்ணாமலைநகர்-இளையான்குடி சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 40 வண்டிகள் கலந்துகொண்டன. மாட்டு வண்டி பந்தயத்தில் பெரியமாட்டு வண்டி பந்தயம், நடுமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என 3 பிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 7 வண்டிகள் கலந்துகொண்டன. அதில் முதல் பரிசை கள்ளந்திரி சிவபிரபு மற்றும் எறும்புக்குடி ராஜமுருகன் வண்டியும், 2-வது பரிசை கோட்டணத்தாம்பட்டி பாலு மற்றும் தஞ்சாவூர் தமிழரசன் வண்டியும், 3-வது பரிசை பூக்கொல்லை காளிமுத்து ஆகியோர் வண்டியும் பெற்றது.

நடுமாட்டு வண்டி பந்தயத்தில் 9 வண்டிகள் கலந்துகொண்டதில் முதல் பரிசை சிவகங்கை ரோகன் மற்றும் புதுப்பட்டி இளையராஜா ஆகியோர் வண்டியும், 2-வது பரிசை அவனியாபுரம் மோகன் மற்றும் கொடிக்குளம் கவுதம் ஆகியோர் வண்டியும், 3-வது பரிசை பூவந்தி தியானபாண்டி மற்றும் வானக்கருப்பு செல்வேந்திரன் ஆகியோர் வண்டியும் பெற்றது.

குதிரை வண்டி பந்தயம்

இறுதியாக நடைபெற்ற சின்னமாடு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை நல்லாங்குடி முத்தையா மற்றும் திருவாதவூர் எஸ்.எம்.பிரதர்ஸ் வண்டியும், 2-வது பரிசை வள்ளியூர் ஆனந்த் மற்றும் கள்ளந்திரி சிவபிரபு ஆகியோர் வண்டியும், 3-வது பரிசை கல்லல் உடையப்பா சக்தி வண்டியும் பெற்றது. இதை தொடர்ந்து நடந்த குதிரை வண்டி பந்தயத்தில் பெரியகுதிரை வண்டி பந்தயமாக மொத்தம் 13 வண்டிகள் கலந்துகொண்டன. அதில் முதல் பரிசை கோவை பாமாசரவணன் வண்டியும், 2-வது பரிசை திருக்கடையூர் அலைகஸ்ரகு வண்டியும், 3வது பரிசை காட்டுப்புலி ஆர்.எஸ்.ஆர். வண்டியும், 4-வது பரிசை திருநெல்வேலி ராஜாத்தி ஆகியோர் குதிரை வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்