சோலார் அருகே நடந்த ரேக்ளா பந்தயத்தில் சீறிப்பாய்ந்த குதிரைகள்

சோலார் அருகே நடந்த ரேக்ளா பந்தயத்தில் குதிரைகள் சீறிப்பாய்ந்து சென்றன.

Update: 2023-05-07 22:20 GMT

சோலார்

சோலார் அருகே நடந்த ரேக்ளா பந்தயத்தில் குதிரைகள் சீறிப்பாய்ந்து சென்றன.

ரேக்ளா பந்தயம்

சோலார் அருகே உள்ள லக்காபுரத்தில் ஈரோடு ரேக்ளா அசோசியேஷன், ஈரோடு நாட்டு மாடுகள் பாதுகாப்பு குழு ஆகியவை இணைந்து 17-வது ஆண்டாக நேற்று காலை காளை மற்றும் குதிரை ரேக்ளா பந்தயத்தை நடத்தியது. மொடக்குறிச்சி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணி கொடியசைத்து போட்டிகளை தொடங்கி வைத்தார்.

ஒற்றை மாடு, ஒற்றை குதிரை பந்தயம் என 2 பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது.

சீறிப்பாய்ந்தன...

இதில் பெரிய ஒற்றை மாட்டுக்கு 8 கி.மீ., சிறிய ஒற்றை மாட்டுக்கு 6 கி.மீ., பெரிய குதிரைக்கு 10 கி.மீ., சிறிய குதிரைக்கு 8 கி.மீ., புதிய குதிரைக்கு 7 கி.மீ. என பந்தய தூரம் நிர்ணயிக்கப்பட்டது. சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடுகள், குதிரைகள் போட்டியில் பங்கேற்றன.

குதிரைகளும், காளைகளும் ரோட்டில் சீறிப்பாய்ந்து சென்றன. இதனை ரோட்டோரம் நின்று ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். இறுதியில் போட்டிகளில் வெற்றி பெற்ற காளை, குதிரைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்