கலைஞருக்கு பிடித்தமான தோனியின் முன்னிலையில், 'கலைஞர் ஸ்டாண்ட்' திறந்து வைத்ததில் பெருமை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்

கலைஞருக்கு பிடித்தமான தோனியின் முன்னிலையில், 'கலைஞர் ஸ்டாண்ட்' திறந்து வைத்ததில் பெருமை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2023-03-17 15:44 GMT

சென்னை,

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் புதிதாக நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள கேலரிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ஸ்டாண்டிற்கு கலைஞரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ரூ.139 கோடியில் புனரமைக்கப்பட்ட சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தையும் கலைஞர் கருணாநிதி பெயரில் புதிய ஸ்டாண்டையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் ஐசிசி சேர்மன் சீனிவாசன், முன்னாள் இந்திய அணியின் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான டோனி மற்றும் பிராவோ ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், சேப்பாக்கம் மைதான திறப்பு விழா குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

"கலைஞருக்கு பிடித்தமான கிரிக்கெட் வீரரான தோனியின் முன்னிலையில், சேப்பாக்கம் மைதானத்தில் கலைஞரின் பெயரிலான 'கலைஞர் ஸ்டாண்ட்-ஐ' திறந்து வைத்ததில் பெருமை அடைகிறேன். கிரிக்கெட்டின் தீவிர ரசிகராக இருந்த எங்கள் காவியத் தலைவருக்குத் தகுந்த அஞ்சலியாக இதை கருதுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

சேப்பாக்கம் மைதானம் புதுப்பிக்கப்பட்ட நிலையில் முதல் போட்டியாக இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் மார்ச் 22-ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags:    

மேலும் செய்திகள்