கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இக் கல்லூரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த 3 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை வழங்கக்கோரியும், நிலுவைத் தொகையினை வழங்க கோரியும் நேற்று வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையை வழங்காதவரை உள்ளிருப்பு போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர்.