பெண்ணை மானபங்கம் செய்தவர் மீது வழக்கு
பெண்ணை மானபங்கம் செய்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.;
பேரையூர்,
பேரையூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 55 வயது பெண். இவர் மலை அடிவாரத்தில் விவசாயம் செய்து வருகிறார். சம்பவத்தன்று அந்த பெண் ேதாட்டத்தில் ஆடு, மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த பென்னி என்ற பார்த்திபன் என்பவர் அங்கு வந்து அப்பெண்ணை மானபங்கம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்த்திபனை தேடி வருகின்றனர்.