தேவர் சிலை, உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை

திண்டுக்கல் உள்பட பல்வேறு இடங்களில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலை மற்றும உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Update: 2022-10-30 16:02 GMT

திண்டுக்கல் உள்பட பல்வேறு இடங்களில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலை மற்றும உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தேவர் ஜெயந்தி

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை இன்று நடைபெற்றது. இதையொட்டி தேவர் பேரவை சார்பில் சின்னாளப்பட்டியில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதற்கு சின்னாளப்பட்டி தேவர் சிலை நிறுவனர் பி.எஸ்.சேகர் தலைமை தாங்கி, தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார். இதில், தேவர் பேரவை தலைவர் கலைச்செல்வன், துணைத்தலைவர் துரைத்தேவர் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதேபோல் தி.மு.க. சார்பில் ஆத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் சின்னாளப்பட்டி பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு தேவர் சிலை பகுதிக்கு வந்தனர். பின்னர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அ.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் சக்கரபாணி தலைமையிலும், காங்கிரஸ் சார்பில் மாவட்ட துணைத்தலைவர் ராமு.ராமசாமி தலைமையிலும், தே.மு.தி.க. சார்பில் ஒன்றிய செயலாளர் முத்து, மாவட்ட செயலாளர் ஜவஹர் ஆகியோர் தலைமையிலும், பா.ம.க. சார்பில் முன்னாள் ஒன்றிய செயலாளர் நாகேந்திரன் தலைமையிலும், தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் சார்பிலும் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மாலை அணிவித்து மரியாதை

அகில இந்திய பார்வர்ட் பிளாக் (பசும்பொன்) கட்சியின் சார்பில் தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை, சாணார்பட்டி அருகே உள்ள சிலுவத்தூர் பஸ் நிலைய பகுதியில் இன்று நடைபெற்றது. அப்போது அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முத்துராமலிங்கத்தேவரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் நத்தம் தொகுதி தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு செயலாளர் சென்னை ராஜா முன்னிலை வகித்தார். திண்டுக்கல் மாவட்ட பொதுச் செயலாளர் ரஞ்சித் போஸ், மாவட்ட வக்கீல் பிரிவு பொதுச் செயலாளர் ராஜராஜசோழன், மாநகர் பொறுப்பாளர் மணி, சாணார்பட்டி ஒன்றிய பொறுப்பாளர் கலை உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். மேலும் நிகழ்ச்சியின்போது, கட்சிக்கொடி ஏற்றப்பட்டது. முடிவில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பழனி அடிவாரத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், சமுதாய அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அதேபோல் அடிவாரம் பகுதியை சேர்ந்த மக்கள் சார்பில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது.

அன்னதானம்

திண்டுக்கல்லில், முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதையொட்டி, சர்வதேச நேதாஜி தோழர்கள் பேரவை சார்பில், திண்டுக்கல் ஓதசுவாமிகள் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தை சர்வதேச நேதாஜி தோழர்கள் பேரவையின் நிறுவனர் கவுதம் சித்தார்த் தொடங்கிவைத்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

இதில் மாவட்ட இளைஞரணி தலைவர் கோபிநாத், வக்கீல் அணி தலைவர் ராஜராஜசோழன், தொழிற்சங்க தலைவர் மனோஜ், இலக்கிய அணி செயலாளர் வீரன் வினோத் மற்றும் தாடிக்கொம்பு ஒன்றிய தலைவர் சவுந்தர் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அன்னதான நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் சென்னை எம்.ராஜா செய்திருந்தார்.

இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்