வீட்டில் பட்டாசு தயாரித்தவர் கைது

வீட்டில் பட்டாசு தயாரித்தவர் கைது செய்யப்பட்டார்

Update: 2023-07-04 19:09 GMT

சிவகாசி கிழக்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி மற்றும் போலீசார் பாரதிநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் உரிய அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அங்கிருந்து சுமார் ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகள் மற்றும் மூலப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து ஆறுமுகசாமி (வயது 45) என்பவரை கைது செய்தனர். சிவகாசி பகுதியில் வீடுகளில் பட்டாசு தயாரிப்பது அதிகரித்துள்ளது. இதனால் விபத்து ஏற்பட்டு உயிர்சேதம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்