இல்லம்தேடி கல்வி திட்ட மாணவர்கள் சாதனை

இல்லம்தேடி கல்வி திட்ட மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர்

Update: 2022-06-13 16:52 GMT

கொள்ளிடம்

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே உள்ள அளக்குடி ஊராட்சியை சேர்ந்த காவல்மானியம், காடுவெட்டி, சேத்திருப்பு ஆகிய கிராமங்களில் இல்லம் தேடி கல்வி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த 3 மையங்களும் சேத்திருப்பு நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் பாலு கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டு வருகின்றன. இதன் தன்னார்வலர்களாக வர்ஷா, ஷர்மிலி, கிருத்திகா ஆகியோர் உள்ளனர். இந்த மையங்களின் மாணவ-மாணவிகள், தற்போது நடைபெற்று வரும் `ரீடிங் மாரத்தான்' என்ற நிகழ்ச்சியில் மாவட்டத்திலேயே காவல்மானியம் மையம் 2 லட்சத்து 50 ஆயிரம் நட்சத்திர மதிப்பெண்களும், காடுவெட்டி மையம் 4 லட்சத்து 50 ஆயிரம் நட்சத்திர மதிப்பெண்களும், சேத்திருப்பு மையம் 3 லட்சம் நட்சத்திர மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர். மாவட்ட அளவில் தொடர்ந்து சாதனை படைத்து வரும் இந்த மையங்களின் பொறுப்பாளர்களை கொள்ளிடம் வட்டார கல்வி அலுவலர்கள் சீனிவாசன், சரஸ்வதி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் புகழேந்தி மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.





Tags:    

மேலும் செய்திகள்