அங்கலகுறிச்சியில் இல்லம் தேடி கல்வி திட்ட தொடக்கம்

அங்கலகுறிச்சியில் இல்லம் தேடி கல்வி திட்ட தொடக்கம்

Update: 2023-01-10 18:45 GMT

கோட்டூர்

தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறையின் மூலம் கொரோனா தொற்று விடுமுறை காலத்தில் தொடக்க கல்வி குழந்தைகளிடம் ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடு செய்வதற்கு இல்லம் தேடி கல்வி என்கிற சிறப்பு திட்டம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டது. இல்லம் தேடி கல்வி மையங்களில் தன்னார்வலர்களுக்கு தகுதி தேர்வு நடத்தி பயிற்சிகள் வழங்கப்பட்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனைமலை தாலுகாவில் தொடக்க வகுப்பில் 260 மையங்கள், உயர் தொடக்க வகுப்பில் 160 மையங்கள் என மொத்தம் 420 மையங்களில் இல்லம் தேடி கல்வி தொடங்கப்பட்டது. தலைமை ஆசிரியர்கள் மேற்பார்வையில் இந்த மையங்கள் செயல்பட்டு வருகின்றன. சிறப்பு திட்டமாகிய இல்லம் தேடி கல்வி திட்டத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா கோட்டூர் அருகே அங்கலகுறிச்சி இல்லம் தேடி கல்வி மையத்தில் நடைபெற்து. விழாவில் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. தன்னார்வலர் கவிப்பிரியா விழாவை ஒருங்கிணைத்தார். இல்லம் தேடி கல்வி வட்டார ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன், தன்னார்வலர் முத்துக்கனி மற்றும் குழந்தைகளின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்