சூரமங்கலம்:-
சேலம் ஜாகீர்அம்மா பாளையம் பகுதியை சேர்ந்த பூபதி, சந்தோஷ், கோபால், சரவணன் ஆகியோர் அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் சரவணனின் வீட்டுக்குள் புகுந்துள்ளனர். அங்கு இருந்த சரவணின் மனைவி ராஜேஸ்வரியை (வயது 40) தாக்கியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூபதி (38), சந்தோஷ் (30), கோபால் (40) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.