பயணி தவறவிட்ட பையை கண்டுபிடித்து கொடுத்த ஊர்க்காவல் படை வீரர்கள்
பயணி தவறவிட்ட பையை ஊர்க்காவல் படை வீரர்கள் கண்டுபிடித்து ஒப்படைத்தனர்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த அருள்குமார் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்துக்கு வந்த போது உடமைகளை அடங்கிய பையை தவறவிட்டார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த ஊர்க்காவல் படையை சேர்ந்த மதிவாணன், சதீஸ்குமார் ஆகியோர் அந்த பையை கண்டுபிடித்து அருள்குமாரிடம் ஒப்படைத்தனர். பயணி தவறவிட்ட பையை கண்டுபிடித்து கொடுத்த ஊர்க்காவல் படை வீரர்களை பயணிகள், போலீசார் பாராட்டினர்.