ஊர்க்காவல் படைவீரர்- ஜவுளிக்கடை ஊழியர் நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை

நெல்லையில் ஊர்க்காவல்படை வீரர், ஜவுளிக்கடை ஊழியர் நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை போட்டது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Update: 2022-10-07 20:13 GMT

நெல்லை சந்திப்பு பகுதியை சேர்ந்தவர் பிரம்மநாயகம் (வயது 28). ஊர்க்காவல் படை வீரர். இவர் கடந்த 3-ந் தேதி இரவு பாதுகாப்பு பணியை முடித்துக்கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அவர் வண்ணார்பேட்டை-சந்திப்பு சாலையில் சென்றபோது ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்க்கும் ஒருவர் அங்கு வந்தார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இருவரும் திடீரென மோதலில் ஈடுபட்டு, நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதுறித்து விசாரணை நடத்த மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், பிரம்மநாயகத்துடன் மோதலில் ஈடுபட்டது வீரவநல்லூர் அருகே உள்ள கரிசூழ்ந்தமங்கலத்தை சேர்ந்த முத்துச்சரவணன் (32) என்பதும், மோதலில் காயம் அடைந்த பிரம்மநாயகம், முத்துச்சரவணன் ஆகியோர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில், பிரம்மநாயகம் முன்பு ஜவுளிக்கடையில் வேலை பார்த்தபோது அவருக்கும், முத்துச்சரவணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் தற்போது ஊர்க்காவல் படையில் சேர்ந்து பணியாற்றி வரும் பிரம்மநாயகம் சம்பவத்தன்று வண்ணார்பேட்டை-சந்திப்பு சாலையில் வந்தபோது அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. அதனை ஜவுளிக்கடை காவலாளி ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டது தெரியவந்து உள்ளது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட 3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், விசாரணை முடிவில் ஊர்க்காவல் படை வீரர் பிரம்மநாயகம் மீது நடவடிக்ைக எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்