புனித விண்ணேற்பு மாதா ஆலய தேர்பவனி
பணிக்கன்குப்பம் புனித விண்ணேற்பு மாதா ஆலய தேர்பவனி நடந்தது.
பண்ருட்டி:
பண்ருட்டி அடுத்த பணிக்கன்குப்பத்தில் புனித விண்ணேற்பு அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் தேர் பவனி விழா நேற்று இரவு 10 மணிக்கு வாணவேடிக்கையுடன் நடந்தது. இதையொட்டி கடலூர் உயர் மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் ஆலயத்தில் கொடியேற்றினார். பணிக்கன்குப்பம் பங்கு தந்தை மரிய ஆனந்தராஜ் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடைபெற்றது. விழாவில் சேலம் மாவட்ட ஆயர் ராயப்பன், பங்குகுழு உறுப்பினர்கள், அருட் கன்னியர்கள், சாத்திப்பட்டு, மாளிகம்பட்டு, அழகப்பசமுத்திரம், பிள்ளையார்குப்பம், சூரக்குப்பம், மாளிகைமேடு, பண்ருட்டி, நெய்வேலி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். இதனை தொடர்ந்து நேற்று காலை கொடி இறக்கம், நற்கருணை ஆசிர் நடந்தது.