புனித அடைக்கல மாதா ஆலய தேர் பவனி
முக்காணி குருவித்துறைபுனித அடைக்கல மாதா ஆலய தேர் பவனி
ஆறுமுகநேரி:
முக்காணி குருவித்துறையில் உள்ள புனித அடைக்கல மாதா ஆலய தேர் திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் மாலையில் ஜெபமாலை, நவநாள் திருப்பலி, மறையுறை ஆகியவை நடைபெற்றன. 11-ம் திருநாளான நேற்று முன்தினம் காலை திருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடந்தது. தூத்துக்குடி மறைமாவட்ட முன்னாள் ஆயர் இவோன் அம்புரோஸ் ஆண்டகை தலைமை தாங்கி திருப்பலியை நிறைவேற்றினார். இதில் மங்களகிரி டிவைன் மெர்சி தியான இல்ல இயக்குனர் மகிழன் அடிகளார், தூத்துக்குடி புனித தாமஸ் பள்ளி அமலன் தமியான் அடிகளார் உள்ளிட்ேடார் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து புனித அடைக்கல மாதாவின் சொரூபம் தாங்கிய தேர் பவனி முக்கிய வீதிகள் வழியாக நடந்தது. ஏராளமானோர் நேர்ச்சையாக உப்பு, மிளகு செலுத்தி மாதாவை வழிபட்டனர். மாலையில் கொடி இறக்கமும், நற்கருணை ஆசிரும் நடந்தது. விழா ஏற்பாடுகளை பழையகாயல் பங்குத்தந்தை வெனிஸ்டன் அடிகளார், பரதசமுதாய கமிட்டியின் தலைவர் அ.ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.