புனித லூர்து மாதா ஆலய தேர்பவனி

வாய்மேடு அருகே புனித லூர்து மாதா ஆலய தேர்பவனி

Update: 2023-05-28 18:45 GMT

வாய்மேடு:

வாய்மேட்டை அடுத்த தாணிக்கோட்டகம் கிராமத்தில் புனித லூர்து மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 9-வது நாள் நிறைவையொட்டி ஆலயத்தில் கூட்டு பாடல் திருப்பலி நடைபெற்றது. இதில் ஆலய பங்குத்தந்தை ஆரோக்கியசாமி, பங்கு துணைத்தலைவர் சேவியர், செயலாளர் அந்தோணிசாமி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தொடர்ந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சொருபங்கள் எழுந்தருளி, தாணிக்கோட்டகத்தின் முக்கிய வீதிகள் வழியாக தேர்பவனி நடைபெற்றது. இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் வைத்தியநாதன், ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்