புனித வனத்து சின்னப்பர் ஆலய திருவிழா

சிவகங்கை மறை மாவட்டம் புளியால் பங்கை சேர்ந்த கொடுங்காவயல் புனித வனத்து சின்னப்பர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2023-04-23 18:45 GMT

தேவகோட்டை,

சிவகங்கை மறை மாவட்டம் புளியால் பங்கை சேர்ந்த கொடுங்காவயல் புனித வனத்து சின்னப்பர் ஆலய 65-வது ஆண்டு திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா கொடி மரத்தை தேவகோட்டை ஆனந்தா கல்லூரி இயக்குனர் கிறிஸ்டோபர் அர்ச்சித்து கொடி ஏற்றி வைத்தார். பங்குத்தந்தை அகஸ்டின் தலைமையில் கிறிஸ்டோபர், பிரிட்டோ ஆகியோர் கூட்டு சிறப்பு திருப்பலி நிறைவேற்றினர். 9 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவையொட்டி தினமும் மாலை 6 மணிக்கு திருச்செபமாலை திருப்பலி மறையும் நடைபெறுகிறது.

2-ந் தேதி மாலை 7 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலியும், புனிதரின் தேர்ப்பவனியும் நடைபெறுகிறது. 3-ந் தேதி நிறைவு திருவிழா திருப்பலியும், கொடி இறக்கமும் நடைபெறுகிறது. அன்று இரவு 10 மணிக்கு ஞானசவுந்தரி நாடகம் நடைபெறுகிறது. மதுரை உயர்மறை மாவட்டத்தால் புதுமை வழங்கிய 3-வது திருத்தலமாக அறிவிக்கப்பட்ட இந்த திருத்தலத்திற்கு 9 நாட்களும் ஆலயத்திலேயே பலர் தங்களுக்கு ஏற்பட்ட பல பிணிகள் மற்றும் வேண்டுதல்கள் நிறைவேற அங்கேயே தங்கியுள்ளனர். மேலும் நேர்த்திக்கடனுக்காக பக்தர்கள் ஆயிரக்கணக்கில் ஆடு, கோழிகளை பலியிட்டு வருகின்றனர். விழா ஏற்பாடுகளை புலியால் பங்கு தந்தை அகஸ்டின், ஓய்வு பெற்ற தாசில்தார் மரியதாஸ் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்