ஊரக உள்ளாட்சி வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் பள்ளிகள், கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை-கலெக்டர் கார்மேகம் உத்தரவு

ஊரக உள்ளாட்சி வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் பள்ளிகள், கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் கார்மேகம் அறிவித்து உள்ளார்.

Update: 2022-07-08 22:37 GMT

சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் சேலம், மேச்சேரி, தலைவாசல், காடையாம்பட்டி ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களுக்கு இன்று பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த தகவலை மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்