விடுமுறை வேதாகம பள்ளி நிறைவு நிகழ்ச்சி

குன்னூர் சி.எஸ்.ஐ. ஜோசப் ஆலயத்தில் விடுமுறை வேதாகம பள்ளி நிறைவு நிகழ்ச்சி நடந்தது

Update: 2022-06-05 12:15 GMT

குன்னூர், 

குன்னூர் அருகே வெலிங்டன் நல்லப்பன் தெருவில் சி.எஸ்.ஐ. ஜோசப் தேவாலயம் உள்ளது. இங்கு 2 ஆண்டுகளுக்கு பின்னர் விடுமுறை வேதாகம பள்ளி (வி.பி.எஸ்.) கடந்த மாதம் 30-ந் தேதி தொடங்கியது. இதனை குன்னூர் சி.எஸ்.ஐ. வெஸ்லி ஆலய பங்குகுரு ரோட்ரிக்ஸ் பர்னபாஸ் தொடங்கி வைத்தார். இதில் 70 பள்ளி குழந்தைகள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு கிறிஸ்தவ குழந்தைகள் பாடல், நடனம் போன்றவை கற்று தரப்பட்டது. கடந்த 3-ந் தேதி குழந்தைகள் ஊட்டிக்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.

 விடுமுறை வேதாகம பள்ளி நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி குழந்தைகள் கலந்துகொண்ட ஊர்வலம் நடந்தது. பின்னர் பங்கு குருக்கள் கிறிஸ்டோபர், ரோட்ரிக்ஸ் பர்னபாஸ் ஆகியோர் சிறப்பு ஆராதனையை நடத்தி வைத்தனர். இதில் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை சேகர குழு உறுப்பினர் ஜேக்கப் தலைமையில், விடுமுறை வேதாகம பள்ளி இயக்குனர்கள் தமிழ் இலக்கியா, மோகனபிரியா செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்