வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் 3-ந் தேதி உள்ளூர் விடுமுறைகலெக்டர் உமா அறிவிப்பு

Update: 2023-07-21 19:00 GMT

நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொல்லிமலையில் கடை ஏழு வள்ளல்களில் ஒருவராக திகழ்ந்த வல்வில் ஓரி மன்னரின் வீரத்தையும், கொடை தன்மையையும் போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 17 மற்றும் 18-ந் தேதிகளில் அரசு சார்பில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 2 மற்றும் 3-ந் தேதிகளில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட உள்ளது.

இதை முன்னிட்டு சுற்றுலா விழா மற்றும் அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெற உள்ளன. எனவே நாமக்கல் மாவட்ட மக்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை பணியாளர்கள் குடும்பத்துடன் கொல்லிமலை பகுதிக்கு செல்ல உள்ளனர்.

எனவே வருகிற 3-ந் தேதி நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. அதை ஈடு செய்யும் வகையில் 12-ந் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது. மேலும் இந்த உள்ளூர் விடுமுறை, செலவாணி முடிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் மாவட்டத்தில் உள்ள கருவூலங்கள், சார்நிலை கருவூலங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவலகங்களை கவனிக்கும் வகையில் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்