சாராயம் பதுக்கல்; பெண் உள்பட 2 பேர் கைது

பிரம்மதேசம் அருகே சாராயம் பதுக்கல்; பெண் உள்பட 2 பேர் கைது

Update: 2023-03-09 18:45 GMT

பிரம்மதேசம்

பிரம்மதேசம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமங்களில் சாராய விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பிரம்மதேசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையிலான போலீசார் பிரம்மதேசம் பகுதிக்குட்பட்ட கிராமங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெருமுக்கல் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவில் வீட்டின் பின்புறம் சாராயத்தை பதுக்கி வைத்திருந்த கூத்தான்(வயது 65), குன்னப்பக்கம் கிராமத்தில் வீட்டின் பின்புறம் சராயத்தை பதுக்கி வைத்த யுவராஜ் மனைவி முத்துலட்சுமி(40) ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து தலா 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்