அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்த ரூ.51 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல் 6 பேர் மீது வழக்கு

அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்த ரூ.51 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-10-16 18:45 GMT

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி பட்டாசுகள் வாங்கி பதுக்கி வைத்து விற்பனை செய்வோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன்படி நேற்று கடலூர் புதுப்பாளையம் சதீஷ்குமார் (வயது 30), அமராவதி (52), சேத்தியாத்தோப்பு கடைவீதி மோகன் (54), அக்பர் அலி (50), ஸ்ரீமுஷ்ணம் கொசத்தெரு லட்சுமி (56), கிள்ளை மேல்அனுவம்பட்டு சீனிவாசன் (40) ஆகிய 6 பேரும் சட்டவிரோதமாக எளிதில் தீப்பற்றக்கூடிய பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தனர்.

இதையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.51 ஆயிரத்து 500 மதிப்புள்ள பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்து, அவர்கள் 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்