கோவில்பட்டி மாவுமில்லில் பதுக்கிய150 கிலோ ரேஷன்அரிசி பறிமுதல்
கோவில்பட்டி மாவுமில்லில் பதுக்கிய 150 கிலோ ரேஷன்அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கே.கோட்டைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் பாரத்லிங்கம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தட்டிஅய்யன் ஆகியோர் கோவில்பட்டி கடலைக்கார தெருவில் உள்ள ஒரு மாவுமில்லில் திடீர் சோதனை நடத்தினர். அங்கு கோவில்பட்டி கன்னிவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்த பால்சாமி (வயது 58) என்பவர் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து மாவாக அரைக்க முயன்றது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பால்சாமியை கைது செய்தனர். அவரிடம் இருந்த 150 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.